பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி காவலர் பதவி நீக்கம்!
பிரித்தானியாவில் உள்ள இந்திய வம்சாவளி காவலர் மேகன் மார்க்கல் மீதான இனவெறி கருத்துக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹாரியின் மனைவி, சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்கல் பற்றிய இனவெறி கருத்துகாக்கவும், மிகவும் புண்படுத்தும் மற்றும் பாரபட்சமான நடத்தைக்காகவும் அறிவிப்பு இல்லாமல் ஸ்காட்லாந்து யார்டில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு காவர்களில் இந்திய வம்சாவளி அதிகாரியும் ஒருவர்.
பெருநகர காவல்துறையில் தடயவியல் சேவையில் பணிபுரியும் போலீஸ் கான்ஸ்டபிள் (PC) சுக்தேவ் ஜீர் (Sukhdev Jeer) மற்றும் பால் ஹெஃபோர்ட் (Paul Hefford) ஆகியோர் தவறான நடத்தைக்காக்கவும், மோசமான செய்திகளை பரிமாறியதாகவும் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், இப்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
2018-ல் இளவரசர் ஹாரியுடன் திருமணத்திற்கு சற்று முன்பு, மார்க்லைப் பற்றி இனவெறி கருத்துக்களை இருவரும் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கருத்துக்கள் ஒரு சில அதிகாரிகள் மட்டும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்: 2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!
டிசம்பர் 2017 மற்றும் டிசம்பர் 2018 க்கு இடையில், மத்திய கிழக்குக் கட்டளைப் பிரிவில் பணிபுரியும் போது, அவர்கள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகளில் ஒரு வாட்ஸ்அப் குழுவில் ஒரு பகுதியாக இருந்ததாக இருவரும் தவறான நடத்தைக்கான குற்றச்சாட்டை எதிர்கொண்டனர்.
அவர்கள் குழுவைப் பயன்படுத்தி பொருத்தமற்ற, மிகவும் புண்படுத்தும் மற்றும் பாரபட்சமான செய்திகள், மீம்கள் மற்றும் உள்ளடக்கத்தைப் பரிமாறிக் கொன்டுள்ளனர். பாலினம், இனம், மதம், பாலியல் நோக்குநிலை மற்றும் இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளடக்கம் பாரபட்சமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜீர் மற்றும் ஹெஃபோர்ட் இருவரும் இப்போது காவல்துறைக் கல்லூரியின் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படுவர் என மெட் காவல்துறையின் மத்திய கிழக்குப் பிரிவிற்கு தலைமை தாங்கும் தலைமை கண்காணிப்பாளர் மார்கஸ் பார்னெட் கூறினார்.
பட்டியலில் உள்ளவர்களை, காவல்துறை, உள்ளூர் காவல் அமைப்புகள் (PCCs), காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் அல்லது கான்ஸ்டாபுலரி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளின் மாட்சிமையின் இன்ஸ்பெக்டரேட் ஆகியவற்றால் பணியமர்த்த முடியாது.
இதையும் படியுங்கள்: கனவில் கண்ட எண்கள்., லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற நபர்!