இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு நேர்ந்த துயரம்: தாய் கண்ணீர்
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக் காயத்துடன் கிடந்த இளைஞர்
கடந்த வியாழக்கிழமை இரவு, இங்கிலாந்திலுள்ள Kempston என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த ஆசிஷ் (Ashish Sachdev Nahar, 25) என்னும் இந்திய வம்சாவளி இளைஞர், பூங்கா ஒன்றில் 16 வயது இளைஞன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார்.
BEDFORDSHIRE POLICE
பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதயத்தில் கத்தி பாய்ந்திருந்ததால் அவர் உயிரிழந்துவிட்டார்.
தாய் கண்ணீர்
25 வயதில் தன் மகனுடைய வாழ்வு முடிந்துவிட்டதை எண்ணி கண்ணீர் விடும் ஆசிஷின் தாயாகிய அனிதா (Anita Nahar), இந்த கத்திக்குத்து குற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆயுதங்களுடன் திரிபவர்கள் மீது இன்னும் அதிகமான நடவடிக்கை தேவை என்று கூறியுள்ள அவர், அதேபோல, இந்த குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிக ஆதரவு அளிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ALEX POPE/BBC
இதற்கிடையில், ஆசிஷ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயதுகளிலிருக்கும் ஒரு நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், 46 வயது பெண் ஒருவர் ஆதாரங்களை மறைக்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆசிஷைக் கொலை செய்த இளைஞனுக்கு 16 வயதே ஆவதால், அவனைக் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த இளைஞன் Luton மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர் செய்யப்பட இருக்கிறான்.
ALEX POPE/BBC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |