மருத்துவமனை கழிவறையில் கேமரா: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவருக்கு சிறைத் தண்டனை
மருத்துவமனையில் ரகசிய கேமரா பொருத்திய வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை கழிவறையில் கேமரா
அமெரிக்காவில் டோலிடோ பல்கலைக்கழக எண்டுராலஜி மற்றும் சிறுநீரக புற்றுநோயியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிற்சி பெற்று வந்த அத்வைத் தேஷ்முக் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் மருத்துவர் மருத்துவமனையின் கழிவறை ஒன்றில் ரகசிய கேமரா பொருத்திய குற்றச்சாட்டில் 6 மாத சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
கடந்த 2025ம் ஆண்டு ஓஹியோ மாநிலத்தில் உள்ள புரோமெடிகா டோலிடோ மருத்துவமனையில் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் ஒன்றை பணியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அதனை வெளிப்படுத்த முயற்சித்த போது மருத்துவர் தேஷ்முக் அதனை தடுத்து நிறுத்தி அதனை தனக்குரியது என்று பறித்துக் கொண்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பிப்ரவரி முதல் மே 2025ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் அந்த தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, மேலும் டோலிடோ பல்கலைக்கழகம் தேஷ்மூக்கை உடனடியாக விடுப்பில் அனுப்பியது.
6 மாத சிறைத் தண்டனை
கடந்த மாதம் லூகாஸ் கவுண்டி காமன் ப்ளீசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தேஷ்முக் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், 3 ஆண்டுகள் நன்னடை கண்காணிப்பும் விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |