அயர்லாந்தில் மீண்டும் ஒரு இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்
அயர்லாந்தில் மீண்டும் ஒரு இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்
அயர்லாந்தில் வாழும் இந்திய வம்சாவளி தொழிலதிபரான Dr சந்தோஷ் (Dr Santosh Yadav), தன் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே, ஆறு பதின்மவயதினர் தன்னைத் தாக்கியதாக தெரிவித்துள்ள அவர், அவர்கள் தனது மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கி, உடைத்து, தன்னை அடித்து நொறுக்கியதாகவும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது தலை, முகம், கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் அவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும், தன் தாடை எலும்பு உடைந்துள்ளதாகவும், சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Dr சந்தோஷ்.
இப்படி தாக்கப்பட்டது தான் மட்டும் அல்ல என்றும், சமீப காலமாக இந்தியர்கள் மீது தாக்குதல் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார் Dr சந்தோஷ்.
அவர் சொல்வது உண்மைதான். சமீபத்தில் அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த ஜெனிபர் (Jennifer Murray) என்னும் பெண்மணி, 15 முதல் 16 வயதுடைய சுமார் 10 பதின்ம வயதினர் உட்பட 30 ஆண்கள் இந்திய இளைஞர் ஒருவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்குவதைக் கவனித்து அவரை காப்பாற்றியதாக தெரிவித்த ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |