அமெரிக்காவில் இந்திய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை: உயிர் தப்பிய 3 குழந்தைகள்
அமெரிக்காவில் நடந்த குடும்ப தகராறில் இந்திய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்
வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ப்ரூக் ஜவி கோர்ட் பகுதியில் நடந்த குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காவல்துறையினர் கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மீனு டோக்ரா(43) சந்தேக நபரின் மனைவி, கெளரவ் குமார்(33), நிதி சந்தர்(37), ஹரிஷ் சந்தர்(38) ஆகியோரை துப்பாக்கி சூடு காயங்களுடன் சடலங்களாக கண்டெடுத்தனர்.

அட்லாண்டா நகரின் லாரன்ஸ்வில்லில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் 51 வயது விஜய் குமார் என்ற நபர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜயகுமார் மீது நான்கு கொலை குற்றச்சாட்டுகள், நான்கு தாக்குதல் வழக்குகள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தியன் கீழ் 3 பிரிவுகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிர் தப்பிய குழந்தைகள்
இந்த கொடூர சம்பவத்தின் போது வீட்டில் 3 குழந்தைகள் இருந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் வீட்டின் அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.
We are deeply grieved by a tragic shooting incident linked to an alleged family dispute, in which an Indian national was among the victims. The alleged shooter has been arrested, and all possible assistance is being extended to the bereaved family.@MEAIndia @IndianEmbassyUS
— India in Atlanta (@CGI_Atlanta) January 23, 2026
மேலும் அங்கிருந்த ஒரு குழந்தை 911 அழைப்பு விடுத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வந்தனர்.
மேலும் குழந்தைகளையும் எந்தவொரு காயமும் இன்றி பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |