இந்தியாவின் மீதான வரி 50% இருந்து 25% ஆக குறைக்கப்படலாம்: அமெரிக்க நிதித்துறை அமைச்சர் தகவல்
இந்தியா மீதான வர்த்தக வரி 25% ஆக குறைக்கப்படும் என்று அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான வரி
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கிட்டத்தட்ட 75 நாடுகள் மீது புதிய பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அப்போது, அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி இந்தியா மீது 25% வர்த்தக வரியை டிரம்ப் அறிவித்தார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குறிப்பிட்டு வரி விதிப்பை 50% ஆக உயர்த்தினார்.

இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
வரி விதிப்பு குறைக்கப்படும்
இந்நிலையில் இந்தியா மீதான வரி விதிப்பு 25% ஆக குறைக்கப்படும் என்று அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை குறைத்து கொண்டு இருப்பதாகவும், இதனால் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் சரிவடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட தடை இன்னும் அமுலில் இருப்பதாகவும், அவற்றை நீக்குவதற்கு ஒரு வழி இருப்பதாக தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 50% இருந்து 25% ஆக குறைக்கப்படலாம் என்றும் ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |