கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர்: வெஸ்ட் பேங்க்-கில் அரங்கேறிய வாகன தாக்குதல்
வெஸ்ட் பேங்க் பகுதியில் வாகன மோதல் தாக்குதலில் 24 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர்
வியாழக்கிழமை வெஸ்ட் பேங்க்-கின் Beit El குடியேற்றத்திற்கு அருகில் நடந்த வாகன மோதல் தாக்குதலில் Bnei Menashe சமூகத்தை சேர்ந்த 24 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியான சார்ஜென்ட் ஜெரி கிதியோன் ஹங்கல்(Geri Gideon Hanghal) Nof HaGalil பகுதியில் வசித்து வருவதுடன் Kfir Brigade’s Nahshon படைப்பிரிவின் வீரர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட கிதியோன் ஹங்கல் 2020ம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து இஸ்ரேலுக்கு குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் PTI செய்தி நிறுவனத்திடம் சமூக உறுப்பினர் வழங்கிய தகவலில், Asaf சந்திப்புக்கு அருகே புதன்கிழமை இளம் உயிர் பிரிந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் யார்?
சம்பந்தப்பட்ட இடத்தில் கிடைத்த காட்சிகளில், பாலஸ்தீன உரிமம் பெற்ற லொறி ஒன்று பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் காவல் போஸ்ட்களுக்குள் நுழைவதை பார்க்க முடிகிறது.
இதில், மத்திய வெஸ்ட் பேங்க் நகரின் Rafat சேர்ந்த 58 வயதான Hayil Dhaifallah என்ற நபர் தான் சந்தேக நபர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை பெயர் அடையாளங்களை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த ஹங்கலின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |