பறக்கும் விமானத்தில் இந்திய வம்சாவளி நபரால் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் Minneapolis பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த Neeraj Chopra(41). அவர் விமானத்தில் பயணம் செய்த போது தனது பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
இதுகுறித்து சிறுவன் தரப்பில் அளித்த புகாரில் Neeraj Chopra விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது விமானத்தில் கொடுக்கப்பட்ட போர்வையை தன் உடம்பை முழுவதுமாக சுற்றி மூடியுள்ளார்.
மேலும் அருகில் அமர்ந்து பயணித்த சிறுவனிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் விசாரணையில் Neeraj Chopra மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்து வந்த நீதிமன்றம் 16 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்ததற்காக சோப்ராவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.