சிங்கப்பூரில் பணமோசடி செய்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது!
சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் வங்கியில் 2 லட்சம் டொலர் மதிப்பில் பணமோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியில் பண மோசடி
சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞரான மதன ராஜ் சிங்(21) என்பவர் தனியார் வங்கியில் பண மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மதன ராஜ் சிங் என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக UOB வங்கியில் புதிதாக கணக்கைத் தொடங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார். அவர் தெரியாத நபர் ஒருவருக்கு தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை கூறியுள்ளார்.
@NDTV
அந்த நபர் வங்கி கணக்கை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மற்ற நபர்களிடமிருந்து ஸ்கேமிங் மூலம் 2 லட்சம் டொலர்க்கு மேல் மோசடி செய்துள்ளார்.
மதன ராஜ் சிங் மீது வழக்கு
தகவல் அனுப்பும் தளமான டெலிகிராமில் வங்கி கணக்கு விவரங்களுக்கு ஈடாக கடன் வழங்கப்படுவதாக கூறி ஒரு பெண்ணின் நம்பருக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதன் மூலம் விசாரணையை துவங்கிய காவல் துறை குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளது.
மதன ராஜ் சிங்கிற்கும் இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அவரும் அந்த நபரை நம்பி தனது வங்கி கணக்கு விவரங்களை கொடுத்துள்ளார். இதனைப் பயன்படுத்தி அந்த குழு UOB வங்கியில் பண மோசடி செய்துள்ளது.
@Representational image
மதன ராஜ் சிங் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சட்டப்படி நீதிமன்றத்தில் விவாதிக்க வழக்கறிஞரின் உதவியை நாடி உள்ளார். அவர் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பான சான்று வரும் ஏப்ரல் 5-ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது.