அமெரிக்க விமானத்தில் சலசலப்பு: சக பயணியைத் தாக்கிய இந்திய வம்சாவளி நபர் கைது!
அமெரிக்க விமானத்தில் சக பயணியைத் தாக்கிய இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க விமானத்தில் சலசலப்பு
அமெரிக்க விமானம் ஒன்றில் சக பயணியைத் தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 30 அன்று பிலடெல்பியாவிலிருந்து மியாமி நோக்கிச் சென்ற ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், 21 வயதான இஷான் சர்மா என்பவருக்கும், அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த கீனு எவன்ஸ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எவன்ஸின் கூற்றுப்படி, சர்மாவின் நடத்தை விசித்திரமாக இருந்ததாகவும், அது தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்மா தொடர்ந்து தொந்தரவு செய்ததால் உதவி பொத்தானை அழுத்தியதாகவும், அதன் பிறகு சர்மா தன்னைத் தாக்கி கழுத்தை நெரித்ததாகவும் எவன்ஸ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். தற்காப்பிற்காகவே தான் சண்டையிட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விமானம் மியாமியில் தரையிறங்கியதும், இஷான் சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், நீதிமன்ற விசாரணையின் போது, சர்மாவின் வழக்கறிஞர் வேறு ஒரு கோணத்தை முன்வைத்தார்.
தனது கட்சிக்காரர் தனது மத நம்பிக்கைகளின்படி தியானம் செய்ததை எவன்ஸ் விரும்பவில்லை என்றும், அதுவே சண்டைக்குக் காரணம் என்றும் அவர் வாதிட்டார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |