ஹார்முஸில் இருந்து மீட்கப்பட்ட 2 அமெரிக்க விமானிகள்: பின்னணியில் இந்திய வம்சாவளி நபரின் உழைப்பு
அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு விமானிகள் ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது.
மீட்கப்பட்ட அமெரிக்க விமானிகள்
ஈரானிய படைகளால் அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு நடவடிக்கையில் விரைந்து செயல்பட்ட அமெரிக்க படைகள் கோர்செயார்(Corsair) என்ற 24 அடி நீளமுள்ள தானியங்கி படகுகள் மூலம் ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு விமானிகளையும் பத்திரமாக மீட்பு வெற்றியடைந்துள்ளனர்.

டெக்சாஸை தலைமையிடமாக கொண்ட சாரோனிக் டெக்னாலஜிஸ் (Saronic Technologies) என்ற நிறுவனத்தினால் கோர்செயார்(Corsair) என்ற தானியங்கி நவீன படகு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோர்செயார்(Corsair) என்ற தானியங்கி நவீன படகு அமெரிக்க கடற்படையின் டாஸ்க் போர்ஸ் 59-னின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.
கோர்செயார்(Corsair) தானியங்கி நவீன படகின் சிறப்பம்சங்கள்
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் கோர்செயார்(Corsair) தானியங்கி நவீன படகு, மணிக்கு 35 நாட்ஸ் வேகத்தில் செல்லக்கூடியது.
1000 கடல் மைல்களுக்கு அப்பால் வரை செல்லும் திறன் கொண்டது மற்றும் 1000 பவுண்டுகள் வரை எடையை சுமந்து செல்லும் ஆற்றில் கொண்டது.

இந்திய வம்சாவளி நபரின் பங்கு
அமெரிக்க ராணுவ வீரரின் இந்த மீட்பு நடவடிக்கையில் முதன்மை கருவியாக செயல்பட்ட கோர்செயார் தானியங்கி நவீன படகை சாரோனிக் டெக்னாலஜிஸ் தயாரித்த நிலையில், அந்த நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விபவ் அல்தேகரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், முன்னாள் கடற்படை வீரர் டினோ மாவ்ரூகாஸ், டக் லம்பேர்ட், ராப் லேமேன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் விபவ் அல்தேகர் ஆகிய நால்வரால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வரும் விபவ் அல்தேகர், நிறுவனத்தின் மென்பொருள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
விபவ் அல்தேகர், மெஷின் லேர்னிங் மற்றும் சிஸ்டம் இண்டகிரேஷன் ஆகிய சிக்கலான துறைகளில் உள்ள திறமையான குழுக்களை வழிநடத்தி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |