ஓஹியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் கார் விபத்தில் மரணம்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் கார் மோதிய விபத்தில் 30 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.
உயிரிழந்த மிலன் ஹிதேஷ்பாய் படேல் (Milan Hiteshbhai Patel) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்குப் பிறகு மாநில வழி 61 வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் சாலையின் வலது பக்கமாகச் சென்று ஒரு பள்ளத்தில் மோதியதாக தெரிவிக்கபட்டுள்ளது.
சம்பவத்தின் போது காரில் தனியாக இருந்த படேல் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், அவர் காருக்குள் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Representative Image
அவர் ஒரு இயந்திர சாதனத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்கப்பட்டார், ஆனால் அவர் இறுதியில் அவரது காயங்களால் உயிரிழந்தார்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படேல் குடிபோதையில் இருந்தாரா அல்லது போதைப்பொருளின் போதையில் இருந்தாரா என்பது இன்னும் தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.