3 அமெரிக்க இளைஞர்களை கொன்ற இந்திய வம்சாவளி நபர்: காரணம் என்ன?
அமெரிக்காவில் காலிங் பெல் அடித்து விளையாடிய 3 அமெரிக்க இளைஞர்களை, கொன்ற இந்திய வம்சாவளிக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது.
காலிங் பெல் அடித்த இளைஞர்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் காலிங் பெல் அடித்து விளையாடிய, மூன்று சிறுவர்களைக் கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர், குற்றவாளி என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
@ap
ரிவர்சைடு கவுண்டியில் வசிக்கும் அனுராக் சந்திரா, கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்று இளைஞர்களை கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி 19, 2020 அன்று நடந்தது, இளைஞர்கள் குழு சந்திரா வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடியதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அவர்கள் காலிங் பெல் அடித்துவிட்டு ஓடும் போது சந்திராவை பின்புறமாக தாக்கியுள்ளனர்.
விபத்தில் கொலை
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையின் போது, சந்திரா அன்றிரவு தனது வீட்டிற்கு வெளியே கவசம் அணிந்த ஒரு நபரைக் கண்டதும், தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக பயந்ததாகவும், தனது கோபத்தை வாய்மொழியாக வெளிப்படுத்த மற்ற காரைத் துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
@gettyimage
விபத்து நடந்த அன்று இரவு தான் 12 பாட்டில்கள் பீர் குடித்ததாகவும் அவர் சந்திரா பொலிஸாரிடம் சாட்சியம் அளித்துள்ளார். அந்த இளைஞர்கள் சென்ற காரை சந்திரா பின் தொடர்ந்து சென்ற போது, அந்த காரின் மீது மோதியதில் இளைஞர்களின் கார் மரத்தில் போய் மோதியுள்ளது.
இதில் மூன்று அமெரிக்க இளைஞர்கள் உயிரிழந்துள்ளார், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு
2020ஆம் ஆண்டு விபத்திற்கு முன்னர் குடும்ப வன்முறை சம்பவம் தொடர்பாக, சந்திரா ஏற்கனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
@Representational image
அவர் வரும் ஜூலை 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது, மேலும் பரோல் இல்லாமல் சிறைவாசம் அனுபவிக்க தீர்ப்பளிக்கப்படவுள்ளதாக நியூயார்க் செய்தி ஊடகம் தகவல் அளித்துள்ளது.