வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவருக்கு கிடைத்த தண்டனை! வெளியான முக்கிய தகவல்
சட்டவிரோதமான மோசடியில் ஈடுபட்ட இந்திய மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் Jaspreet Singh(26). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் தந்து மேற்படிப்புக்காக சிங்கப்பூர் வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு புதிய அறிமுகங்கள் கிடைத்த நிலையில் பணப்பரிமாற்றம் செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி அவரை மயக்கியுள்ளனர்.
இதையடுத்து Jaspreet Singh தனது வங்கி எண் மற்றும் அலைபேசி எண் போன்றவற்றை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து கனடாவை சேர்ந்த சிலரை ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் Jaspreet Singh பெயரில் மோசடி புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பொலிஸ் அவரை கைது விசாரணை நடத்தினர்.
Jaspreet Singh கூறிய தகவலை வைத்து மற்றவர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜஸ்பிரீத்துக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் நடந்ததை விளக்கி விளக்கி வாதாடினார்.
இதையடுத்து Jaspreet Singhக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் மோசடியில் ஈடுபட்ட பலருக்கு 40 மாதங்கள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.