வெளிநாடொன்றில் இந்தியருக்கு மரண தண்டனை! தெரியாமல் செய்தேன் என்று கூறியதை ஏற்காத நீதிபதி
போதை மருந்துகளை கடத்திய வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷோர் குமார் ரகுவன் (41) என்பவர் மலேசியாவில் வசித்து வந்தார். இவர் ஹெராயின்' போதைப் பொருளை ஒரு பையில் வைத்து, புங் ஆ கியாங் என்பவரிடம் சிங்கப்பூரில் கொடுத்துள்ளார்.
அப்போது இருவரையும் பொலிசார் கைது செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம், கிஷோருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
கிஷோரிடம் இருந்து பையை வாங்கிய புங் ஆ கியாங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராமிற்கு அதிகமான போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை வழங்கப்படும்.
கிஷோர் 36 கிராம் ஹெராயின் வைத்திருந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பையில் போதை மருந்து இருந்தது தெரியாது, அதை 'கல்' என கூறி ஒருவர் புங்கிடம் வழங்குமாறு கூறினார் என கிஷோர் தரப்பில் வாதாடப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.