அமெரிக்காவில் காதலியை சுட்டுக்கொன்ற இந்திய வம்சாவளியினர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், இந்திய வம்சாவளியினர் ஒருவர், தனது காதலியை சுட்டுக்கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியை சுட்டுக்கொன்ற இந்திய வம்சாவளியினர்
கடந்த சனிக்கிழமை காலை, சிம்ரஞ்சித் சிங் (Simranjit Singh, 29) என்னும் இந்திய வம்சாவளியினரான இளைஞர் ஒருவரும், 34 வயதுடைய அவரது காதலியும் கலிபோர்னியாவில் உள்ள மால் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.
மாலின் மூன்றாவது தளத்தில் வைத்து அந்தப் பெண்ணை சுட்டுக்கொன்ற சிங், துப்பாக்கியை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
நேரே சாலையின் மறுபுறம் அமைந்துள்ள கடை ஒன்றிற்குச் சென்ற சிங், ஒரு சட்டை வாங்கி, தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி பைக்குள் வைத்துவிட்டு, வாங்கிய சட்டையை அணிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஆனாலும், அந்த பகுதியிலிருந்த CCTV கமெராக்களின் உதவியுடன் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |