லண்டனில் தாக்குதலுக்குள்ளான இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்: துணிச்சலுடன் செயல்பட்ட மனைவி
இந்திய வம்சாவளியினரான மலேசிய கோடீஸ்வரர் ஒருவர் லண்டனில் தாக்கப்பட்டார்.
இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் மீது தாக்குதல்
இந்திய வம்சாவளியினரும், மலேசிய கோடீஸ்வரரும், Petra Group என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான வினோத் சேகர், கடந்த வாரம் லண்டனில் வாழும் தன் மகளான தாராவின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார்.
சேகர் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து வெளியேறவும், திடீரென அங்கு இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளார்கள்.
சரமாரியாக சேகரைத் தாக்கத்துவங்கிய அவர்கள், அவர் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பறித்துள்ளார்கள்.
தன் கணவர் தாக்கப்படுவதைக் கண்ட சேகரின் மனைவியாகிய Winy Yeap, உடனடியாக காரிலிருந்து இறங்கி சத்தமிட்டவாறே தனது கைப்பையால் தாக்குதல்தாரிகளைத் தாக்கியுள்ளார்.
அவரது தாக்குதலை எதிர்பாராத அந்த நபர்கள் இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், தன் மீதான தாக்குதல் குறித்தும், லண்டன் தெருக்களின் அபாயம் குறித்தும் தான் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில் விளக்கியுள்ளார் சேகர்.
சற்றும் யோசிக்காமல், தன்னைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய தன் மனைவியை பெண் சிங்கம் என பாராட்டவும் தவறவில்லை அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |