ஹெலிகொப்டர் விபத்து: இந்திய வம்சாவளி புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்துள்ள துயரம்
அமெரிக்காவில் புதுமணத் தம்பதியர் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், மணமகன் உயிரிழந்துவிட்டார்.
தேனிலவுக்குச் செல்லும்போது...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி பைலட்டான தேவ் ( Dave Fiji, 26) என்பவருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெஸ்னி (Jessni) என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமக்கள் தேனிலவுக்காக DeKalb-Peachtree என்னுமிடம் நோக்கி ஹெலிகொப்டர் ஒன்றில் புறப்பட்டுள்ளார்கள்.
ஆனால், அந்த ஹெலிகொப்டர் தன் இலக்கை அடையவேயில்லை. ஆம், வழியிலேயே Dawsonville என்னுமிடத்துக்கு அருகில், மரங்களடர்ந்த பகுதியில், அந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தும், ஹெலிகொப்டருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்க ஆறு மணி நேரம் ஆகியுள்ளது.
விபத்தில் காயமடைந்து மயங்கியிருந்த ஜெஸ்னி கண் விழிக்கும்போது, தன் கணவன் தன் மடியில் சாய்ந்திருப்பதைக் கண்டுள்ளார்.
ஜெஸ்னி ஒரு செவிலியர். ஆகவே, தன் கணவன் தன்னை விட்டுச் சென்றுவிட்டார் என்பது உடனடியாகவே அவருக்குப் புரிந்துள்ளது.
கணவனை இழந்த மணமகளும் மணமக்களின் குடும்பத்தினரும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், திருமணமாகி சில மணி நேரங்களுக்குள் கண் முன்னே கணவனை பறிகொடுத்த ஜெஸ்னி மெல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக டேவின் தந்தையான ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தேவ் குடும்பம், இந்தியாவிலுள்ள கேரளாவை பின்னணியாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |