கடலுக்குள் பாய்ந்த கார்... வெளிநாட்டில் இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
Indian origin student’s car plunges into Pacific ocean, dies trapped underwater: இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் பயணித்த கார் கடலுக்குள் பாய்ந்த நிலையில், காருக்குள் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவியான ஆலி ரெனீ சிங் (19), கலிபோர்னியா பல்கலையில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு மூன்றாம் ஆண்டைத் துவங்குவதற்காக காத்திருந்திருக்கிறார்.
இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
இந்நிலையில், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 13ஆம் திகதி, தன் நண்பர் ஒருவருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஆலி.

அப்போது, சான்டா குரூஸ் என்னுமிடத்தில், கடலோரமாக அமைந்துள்ள West Cliff Drive என்னும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த அந்தக் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.
ஆலியுடன் பயணித்த நண்பர் தன்னை விடுவித்துக்கொண்டு காரிலிருந்து வெளியேறி கரை சேர, ஆலி காருக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையிலும், ஆலியை உயிரற்ற நிலையில்தான் மீட்க முடிந்துள்ளது.
ஆலியின் மரணம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |