இரவு விடுதியில் அனுமதி மறுக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர்; குளிரில் உறைந்து உயிரிழப்பு
வெளிநாடொன்றில் இரவு விடுதியில் அனுமதி மறுக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், கடுங்குளிரில் உறைந்து உயிரிழந்தது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
காணாமல் போன இளைஞர்
அமெரிக்காவின் இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அகுல் தவான் (Akul Dhawan) என்னும் மாணவர், சென்ற மாதம் 20ஆம் திகதி காணாமல்போனார்.
தொடர்ந்து அவரை மொபைலில் தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல்போகவே, அவரது நண்பர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
இரவில் பொலிசாரால் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என கூறப்படும் நிலையில், பொலிசார் அவரைத் தெடவேயில்லை என தவானின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
காரணம், சற்று தொலைவிலுள்ள கட்டிடம் ஒன்றின் படிக்கட்டில் தவான் படுத்துக் கிடப்பது மறுநாள் காலை தெரியவந்துள்ளது. அவர் அருகில் சென்று பார்க்கும்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், நீதிமன்ற விசாரணை அதிகாரிகள், தவானின் உயிரிழப்புக்கான காரணத்தை கடந்த வாரம், அதாவது, பிப்ரவரி 20ஆம் திகதி வெளியிட்டுள்ளார்கள்.
தவான் அந்த இரவு விடுதிக்குள் செல்ல முயன்றபோது, இரவு விடுதிப் பணியாளர்கள் அவரை உள்ளே விட மறுத்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் விடுதிக்குள் செல்ல முயன்றும் அவர்கள் அவரை உள்ளே விடாததால், ஒரு கட்டிடத்தின் பின்புறம் சென்று படுத்திருக்கிறார் தவான்.
ஏற்கனவே அவர் மது அருந்தியிருந்த நிலையில், அப்போது வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்ஷியஸாக இருக்கவே, மதுவின் பாதிப்புடன் ஹைப்போதெர்மியா பிரச்சினையும் சேர்ந்துகொள்ள, குளிரில் உறைந்து உயிரிழந்துள்ளார் தவான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |