அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி
அமெரிக்காவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற இந்திய இளைஞர் ஒருவர் சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.
அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் சிக்கிய இந்திய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள கடப்பா என்னுமிடத்தைச் சேர்ந்த திலீப் குமார் (Dileep Kumar Bhungaravula), அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள கென்ட் மாகாண பல்கலையில் கல்வி பயின்று வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, திலீப் ஓட்டிவந்த கார் எதிரே வந்த ட்ரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது.
பொலிசார் அவசர உதவிக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், திலீப் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவருடன் விபத்தில் சிக்கிய மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், நியூயார்க்கிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், திலீப்பின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், தேவையான உதவிகளையும் செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
We are deeply saddened to learn of the untimely demise of Mr. Dileep Kumar Bungatavula, an Indian national, who tragically lost his life in a car accident in Ohio on August 7, 2026.
— India in New York (@IndiainNewYork) August 8, 2026
Our thoughts and heartfelt condolences are with his family during this difficult time. The…
திலீப்பின் தந்தை ஒரு விவசாயி. பிள்ளையை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கே கடன் வாங்கியிருந்த நிலையில், பிள்ளை உயிரிழந்த செய்தி கேட்டு துக்கத்தில் ஆழ்ந்துள்ளதுடன், கடனை அடைக்க என்ன செய்வது என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளது திலீப் குடும்பம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |