அமெரிக்க கடற்படை மாணவர் பட்டாலியனை வழிநடத்தும் 17 வயது ராஜஸ்தான் மாணவி: யார் இந்த ரித்தி சௌஹான்
ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி அமெரிக்க கடற்படையின் மாணவர் பிரிவை வழிநடத்தும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவியின் சாதனை
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்ட 17 வயது மாணவி ரித்தி சௌஹான், அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் உள்ள பெஞ்சமின் கார்டோசோ உயர்நிலைப் பள்ளியில் ரித்தி சௌஹான் பயின்று வருகிறார்.

இவர் 2 ஆண்டுகளாக தன்னுடைய பள்ளியை கல்விப் போட்டியில் தொடர்ந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார்.
மேலும், படை பிரிவின் முதல் சீபெர்ச் நீருக்கடியில் இயங்கும் ரோபோவின் உருவாக்கம் மற்றும் தேசிய கல்வித் தேர்வில் முதலிடம் ஆகியவற்றை பெறுவதற்கும் ரித்தி சௌஹான் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
அத்துடன் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வந்து, படைப்பிரிவின் தினசரி செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை மேற்பார்வையிட்டு இளம் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க கடற்படையின் இளநிலை அதிகாரிகள் படைப்பிரிவின் பட்டாலியன் கட்டளை அதிகாரியாக ரித்தி செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய ரித்தி, பிறருக்கு உதவுவதும் முன்மாதிரியாக திகழ்வதும் தான் தலைமை பண்பு என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |