அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து: பரிசாக வந்த ஷீ-வை பிடிங்கிய மர்ம கும்பல்
அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவனின் பிறந்தநாளில் மர்ம கும்பல் ஒன்று அவனிடம் கொள்ளையடித்து விட்டு கத்தியால் குத்தி தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துமீறிய மர்ம கும்பல்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 16 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளில் இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்த போது மர்ம கும்பலால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியான் சிங் (Rhyan Singh) என்ற சிறுவன் வியாழக்கிழமை அன்று டார்னிட் நகரில் 2 நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்த போது கைதியுடன் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்துள்ளது.
7 முதல் 8 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுவர்களிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ரியான் அணிந்து இருந்த புதிய நைக் ஏர் ஜோர்டன் ஸ்நீக்கர்ஸ் ஷீ-வையும் பிடிங்கியுள்ளனர்.
பிறந்த நாள் பரிசாக ரியானுக்கு கிடைத்து இருந்த ஷீவை பறித்து கொண்டதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் விருந்துக்கு செல்வதற்கு முன்பு ரியானின் நெஞ்சு எலும்பு பகுதி, கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர், மேலும் தலையிலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு அவனது இடது கையின் விரல்களை காப்பாற்றுவதற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு இருப்பதாகவும், இது முற்றிலும் நியாயமற்றது என்றும் சிறுவனின் தாயார் சுஷ்மார் மானந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சிறுவன் ரியான் உடன் மற்றொரு சிறுவனும் கத்தி குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ரகளையில் ஈடுபட்ட கும்பல் உடனடியாக அங்கிருந்து அடர் நிற வாகனத்தில் அங்கிருந்து சென்று விட்டதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மர்ம கும்பலை பிடிப்பதற்காக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |