கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு நேர்ந்த சோகம்
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சர்ரே நகரத்தில் உள்ள தமனாவிஸ் மேல்நிலைப் பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாயன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்தப்பட்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், உயிரிழந்த நபரின் பெயர் மெஹக்ப்ரீத் சேத்தி (Mehakpreet Sethi) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
IHIT/CBC
மருத்துவமனையில் உயிரிழந்தார்
பொலிஸாரின் தகவல்களின்படி, சேத்தி செவ்வாயன்று நியூட்டன் பகுதியில் 12600 66 அவென்யூவில் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸார் விரைந்து வந்து உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞர் உயிரிழந்தார்.
17 வயது சிறுவனும் பாதிக்கப்பட்ட இளைஞரும் வரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், கும்பல் மோதலுடன் தொடர்புடையதாக நம்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ben Nelms/CBC)
சந்தேக நபர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
தமனாவிஸ் பள்ளி அறிக்கை
இதனிடையே, 18 வயதான சேத்தி பள்ளியைச் சேர்ந்தவர் அல்ல என்று தமனாவிஸ் மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அல்லது பார்த்த மாணவர்களுக்கு கூடுதல் உதவி வழங்கப்படும் என்று பள்ளி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அல்லது இருவருக்கும் இடைளியான சண்டையை நேரில் பார்த்த பள்ளி மாணவர்களிடம், தங்களிடம் உள்ள எந்தவொரு தகவலையும் தெரிவிக்குமாறு போலீசார் தரப்பில் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.