அமெரிக்காவின் இனநீதி குழுவில் இந்திய வம்சாவளி CEO தேர்வு
அமெரிக்கா வெளியிட்டுள்ள இனநீதி குழுவினருக்கான தேர்வு பட்டியலில், இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரி உதய் தாம்பர் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் இனநீதி குழு
அமெரிக்காவில் இளைஞர் மேம்பாட்டு சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரி (Udai Tambar) உதய் தாம்பர், நியூயார்க் நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட இன நீதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
@gettyimages
மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் சமத்துவ மேயல் அலுவலகத்தின் ஆணையர் சைடியா ஷெர்மன் ஆகியோரால் தொடங்கப்பட்ட, இன நீதி சாசன திருத்தங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் குழுவின் 15 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
உதய் தாம்பர் நியூயார்க் ஜூனியர் டென்னிஸ் அண்ட் லேர்னிங்கின் (NYJTL) தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
சமத்துவமான சமூகம்
மேயர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, இந்த இனநீதி குழு புதுமையான இன சமத்துவப் பணிகளில் தேசத்தை தொடர்ந்து வழி நடத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@harvard.edu
'NYCயின் உறுதியான சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த புதிய ஆலோசனைக் குழுவுடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று தாம்பர் கூறியுள்ளார்.
'எங்கள் நியூயார்க் ஜூனியர் டென்னிஸ் அண்ட் லேர்னிங்கில் எல்லா வகையான நிறத்தினரும் பாகுபாடில்லாமல் பணிபுரிகிறார்கள், மேலும் இந்த இனநீதி குழுவால் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க முடியும்' என அவர் தெரிவித்துள்ளார்.
@twitter
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியான தாம்பர், கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மேலும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.