பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியர் நியமனம்
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உதய் நாகராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த உதய் நாகராஜு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேல் சபையான House of Lords-ல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது, இந்திய வம்சாவளியினருக்கு பெருமை சேர்த்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
உதய் நாகராஜு, கரிம்நகர் மாவட்டத்தின் சனிகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர், சமூக சேவை மற்றும் பொது கொள்கை துறைகளில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறார்.
அவரது பங்களிப்புகளை முன்னிட்டு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பரிந்துரையின் அடிப்படையில், மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவரை “லைஃப் பியர்” (Life Peer) பட்டத்துடன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நியமித்துள்ளார்.

ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ், இந்தியாவின் ராஜ்யசபாவுக்கு ஒப்பான அமைப்பாகும். இங்கு, சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறுகின்றன.
உதய் நாகராஜுவின் நியமனம், இந்திய வம்சாவளியினரின் சர்வதேச அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்திலிருந்து வந்தவர் இவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்திருப்பது, அங்குள்ள மக்களுக்கு பெரும் பெருமையாகும்.
இந்த நியமனம், இந்தியா-பிரித்தானியா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |