இந்திய வம்சாவளி முன்னாள் அமைச்சரால் உருவாகியுள்ள சர்ச்சை
பிரித்தானியாவின் முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் கூறியுள்ள கருத்து ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிரித்தானியா ஆண்ட நாடுகள்
அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஈராக், அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட, 56 நாடுகள் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழிருந்தன.

உலகப்போர்கள், குறிப்பாக, இரண்டாம் உலகப்போரால் ஏற்பட்ட செலவுகள், இந்தியா போன்ற நாடுகளின் தேசிய இயக்கங்களின் எழுச்சி, நிதி மற்றும் புவிசார் அரசியல் யதார்த்தங்கள் முதலான விடயங்கள், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
முன்னாள் அமைச்சரால் உருவாகியுள்ள சர்ச்சை
விடயம் என்னவென்றால், 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை, லட்சக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், காபி, புகையிலை, கொக்கோ மற்றும் பருத்தி எஸ்டேட்களில் வேலை செய்வதற்காக அடிமைகளாக பல்வேறு நாடுகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்கள்.
இந்நிலையில், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் ஒன்றான ஜமைக்கா, அப்படி கடத்திச் செல்லப்பட்ட தன் மக்களுக்காக பிரித்தானியா இழப்பீடு வழங்கவேண்டுமென கோரியுள்ளது.
ஜமைக்காவின் கோரிக்கையை விமர்சித்துள்ள பிரித்தானிய முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், ஜமைக்கா பிரித்தானியாவிடமிருந்து இழப்பீடு கோருவது குறித்து உண்மையாகவே சீரியஸாக எண்ணுமானால், பிரித்தானியாவின் ஆட்சியின் கீழிருந்த நாடுகள்தான் பிரித்தானியாவுக்கு பணம் திருப்பிச் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
The British Empire did so much good for the world.
— Suella Braverman (@SuellaBraverman) July 3, 2026
Of course slavery was abhorrent but to expect the British people of the 21st century to pay for actions that took place in the 18th century has no basis in law.
If the government is seriously thinking about this then former… https://t.co/JWwDtdMEPj
அதாவது, பிரித்தானியா ஆண்ட நாடுகளில் பிரித்தானியா செய்த கணிசமான முதலீடு, முயற்சி மற்றும் பங்களிப்புக்காக, அந்த நாடுகள்தான் பிரித்தானியாவுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் சுவெல்லா.
சுவெல்லாவின் பெற்றோர் இருவருமே இந்திய வம்சாவளியினர். ஆக, புலம்பெயர்ந்தோரின் மகளாக இருந்தும், பிரித்தானியாவால் ஆளப்பட்ட இந்தியாவின் பின்னணி இருந்தும், இப்படி ஒரு கருத்தை சுவெல்லா தெரிவித்துள்ளதால் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |