கால்பந்து அணியை ரூ.91,895 கோடிக்கு வாங்கிய இந்திய வம்சாவளி
இந்திய வம்சாவளியான வினோத் கோஸ்லா NFL அணியை ரூ.91,895 கோடிக்கு வாங்கியுள்ளார்.
NFL அணியை வாங்கிய இந்திய வம்சாவளி
அமெரிக்காவின் NFL அணியான சியாட்டில் சீஹாக்ஸ் அணியை இந்திய வம்சாவளியான வினோத் கோஸ்லா வாங்கியுள்ளார்.

9.6 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.91,895 கோடி) இந்த அணியை வாங்குவதன் மூலம், NFL அணியை அதிக விலைக்கு வாங்குபவர் என்ற பெருமையை வினோத் கோஸ்லா பெறுகிறார்.
71 வயதான வினோத் கோஸ்லா, தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த அணியை வாங்குகிறார்.
முன்னதாக, சான் பிரான்சிஸ்கோ 49ers அணியின் 3.1% பங்குகளை வாங்கினார். NFL விதிப்படி, சியாட்டில் சீஹாக்ஸ் அணியை வாங்குவதால் 49ers அணியின் பங்குகளை விடுவிக்கிறார்.
யார் இந்த வினோத் கோஸ்லே?
இந்தியாவின் புனேவில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த வினோத் கோஸ்லே, தனது இளம் வயதிலேஅமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து கோஸ்லா வென்ச்சர்ஸ் என்ற துணிகர மூலதன நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.

மேலும், சன் மைக்ரோசிஸ்டம்ஸின் இணை நிறுவனராக உள்ளார்.
இவரின் நிறுவனம் Open AI ன் முதல் முதலீட்டாளராக இருந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு வரும் முன்னர், 2019 ஆம் ஆண்டிலே 50 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் $13.8 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |