இந்திய பெண்ணுக்கு 16 மாதம் சிறை தண்டனை! வெளிநாட்டு நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூரில் கொரோனா மானியம் பெறுவதில் மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் ராஜகோபால் மாலினி(48). இந்த பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். தனியார் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இவர், அரசு வழங்கிய கொரோனா மானியத்தில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
அதே வேளையில் அவர் வேலை செய்து வந்த தனியார் நிறுவனத்தில் இருந்து சுமார் 4,000 டொலர் திருடியதால் அந்நிறுவனம் ராஜகோபால் மாலினி மீது புகார் அளித்துள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில் மாலினியை பொலிஸ் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீதான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது.
இதில் ராஜகோபால் மாலினி செய்த குற்றம் ஆதாரத்துடன் நிரூப்பிக்கப்பட்டதால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு அடிப்படையில் அந்த பெண் ஜெயிலில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.