இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளம்பெண் மீது இனவெறுப்பு தாக்குதல்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ
காலம் எவ்வளவு மாறினாலும் மாறாத சிலர் இருக்கிறார்கள். இந்தக் காலத்திலும் பழம்பெருமை பேசிக்கொண்டு வாழ்வதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.
நாங்கள் இந்தியாவை ஆண்டோம், அது எங்களுக்குத் தேவையில்லை என்பதால் அதை திருப்பிக் கொடுத்துவிட்டோம் என்று கூறியுள்ளார் பிரித்தானியர் ஒருவர்.
விடயம் என்னவென்றால், ஒரு கூட்டம் அவரை தேசபக்தர் என்றும், ஹீரோ என்றும் கொண்டாடுகிறது!
இந்திய வம்சாவளி இளம்பெண் மீது இனவெறுப்பு தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை, லண்டனிலிருந்து மான்செஸ்டர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றில் கேப்ரியல் ஃபோர்சித் (Gabrielle Forsyth, 26) என்னும் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
தன் சக பயணி ஒருவரிடம் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் தொண்டு நிறுவன ஒன்றுடன், தான் பணியாற்றிவருவது குறித்து அவர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரித்தானியர் ஒருவர், கேப்ரியலை மோசமான வார்த்தைகளாலும் இனரீதியாகவும் விமர்சிக்கத் துவங்கியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஆத்திரம் வந்துவிட்டதாம் அந்த நபருக்கு!
தப்புத்தப்பாக வரலாறு பேசிக்கொண்டு, தான் கேப்ரியலை இனரீதியாக தான் விமர்சிப்பதையே வீடியோவும் எடுத்துள்ளார் அந்த நபர்.
விடயம் என்னவென்றால், இந்த வீடியோவை கேப்ரியல் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, வெள்ளையர்கள் பலர் கேப்ரியலை மேலும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்கள் என்பது அதைவிடக் கொடுமை.
Also I just want to say you could never make me ashamed of being brown. I will never be ashamed of my heritage, and I will never be afraid of Nazis or bigots. Call me whatever, threaten me with whatever. I'm not going anywhere and you can die mad about it.
— gabrielle ☭ (@forsyth_gabby) February 10, 2025
கேப்ரியலை இனரீதியாக தாக்கியவரையோ, தேசபக்தர் என்றும், ஹீரோ என்றும் சிலர் பாராட்டியுள்ளது, அவர்களுடைய மன நிலை இன்னமும் மாறவில்லை, அவர்கள் இந்திய வம்சாவளியினர் மீதும், புலம்பெயர்ந்தோர் மீதும் வெறுப்பு வைத்துள்ளார்கள் என்பதையே காட்டுவதாக அமைந்துள்ளது வருத்தத்துக்குரிய விடயம்தான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |