அமெரிக்க கல்லூரி மீது வழக்கு தொடர்ந்துள்ள இந்திய வம்சாவளி பெண்: நிறப் பாகுபாடு காட்டுவதாகக் குற்றச்சாட்டு!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர், தான் இனம் மற்றும் பாலினப் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்க கல்லூரி மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளார், என்று அமெரிக்க ஊடகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இனப் பாகுபாடு
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள வெல்லஸ்லி வணிகப் பள்ளியில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர், தான் இனம் மற்றும் பாலினப் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பாப்சன் கல்லூரியின் தொழில்முனைவோர் இணைப் பேராசிரியை லக்ஷ்மி பாலச்சந்திரா, அவர் தனது வேலை வாய்ப்புகளை இழந்ததாகவும், பொருளாதார இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அக்கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் செய்துள்ளார்.
வெள்ளையர்களுக்கு முன்னுரிமை
பாப்சன் கல்லூரி அமெரிக்க நாட்டை சேர்ந்த ஆசிரியர்களை மற்றும் ஆதரிப்பதாகவும், நிறபாகுபாடு காட்டி வெள்ளையர்களுக்கு மட்டும் விருதுகள் மற்றும் சலுகைகளை அவர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
@inas
தொழில் முனைவோர் பிரிவில் பணிபுரியும் அமெரிக்க ஆண் ஆசிரியர்களுக்கு மட்டும் இது போன்ற சலுகைகள் வழக்கமாகத் தரப்படுகின்றன எனப் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி லஷ்மி பாலசந்திராவின் வழக்கறிஞர் மோனிகா ஷா கூறுகையில் அக்கல்லூரி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டிற்கு பாப்சன் கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரம் சிக்கலானது, இதற்காக நாங்கள் வருந்துகிறோம் எனப் பதிலளித்துள்ளது.