9 கோடி டொலருக்கு மேல் கார்ப்பரேட் மோசடி- இந்திய வம்சாவளி நிர்வாகிகள் கைது
அமெரிக்காவில் 9 கோடி டொலருக்கு மேல் கார்ப்பரேட் மோசடி செய்த இரண்டு இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார்ப்பரேட் மோசடி
அமெரிக்காவின் சிகாகோவை தளமாக கொண்ட அவுட்கம் சுகாதார நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி நிர்வாகிகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இலக்காக கொண்ட ஒரு பெரிய கார்ப்பரேட் மோசடி திட்டத்தை இயக்கியதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் ஜூரியால்(federal jury) தண்டிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிஷி ஷா(Rishi Shah), 22 வழக்குகளில் 19ல் குற்றவாளி என்றும், இணை நிறுவனரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஷ்ரதா அகர்வால்(Shradha Agarwal) 15 வழக்குகளில் குற்றவாளி என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
@linkedlin
குற்றவாளிகளான ரிஷி ஷா, ஷ்ரதா அகர்வால் மற்றும் பர்டி ஆகியோர் ஒவ்வொரு வங்கி மோசடிக்கும் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இதர மோசடிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு பணமோசடி குற்றத்திற்காகவும் ரிஷி ஷா என்பவர் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையை சந்திக்க நேரிடும். அவர்களுக்கான தண்டனை விவரம் பிற்காலத்தில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறைத் தண்டனை
அமெரிக்காவின் சுகாதார துறையானது நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ அலுவலகங்களில் மின்னணு சாதனங்களை அமைத்து, அந்த சாதனங்களில் விளம்பர இடத்தை வாடிக்கையாளர்களுக்கும், மருந்து நிறுவனங்களுக்கும் விற்றுள்ளது.
இருப்பினும், ரிஷிஷா, அகர்வால் மற்றும் பர்டி ஆகியோர் நிறுவனத்திடம் இல்லாத விளம்பர சரக்குகளை விற்றுள்ளனர்.
@gettyimages
அதுமட்டுமில்லாமல் வாக்குறுதியளிக்கப்பட்ட விளம்பர பிரச்சாரங்களை வழங்காமல் இருந்த போதிலும், அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்குவது போல் விலைப்பட்டியல் கொடுத்து அரசையே ஏமாற்றியுள்ளனர்.
ரிஷி ஷா, அகர்வால் மற்றும் பர்டி ஆகியோர் 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டிற்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், பணவீக்கம் செய்யப்பட்ட வருவாய் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி நிதியளிப்பை பெற்றுள்ளனர்.
@gettyimages
அவர்கள் கடந்த ஏப்ரல் 2016ல் 110 மில்லியன் டொலர் கடன் நிதியுதவியும், 2016 டிசம்பரில் 375 மில்லியன் டொலர் கடன் நிதியும், மற்றும் 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் USD 487.5 மில்லியன் ஈக்விட்டி நிதியும் திரட்டியுள்ளனர். முதலீட்டாளர்களையும், கடனளிப்பவர்களையும் ஏமாற்றிய குற்றத்திற்காக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.