இந்திய பயணிகளுடன் ஐரோப்பிய நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 11 சிறார்கள்: இறுகும் விசாரணை
பிரான்சில் 303 இந்தியர்களுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானத்தில் 11 சிறார்களும் பயணப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆட்களை கடத்துவதாக
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதாக எழுந்த புகாரை அடுத்தே, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட அந்த தனியார் விமானத்தை அவசரமாக பிரான்சில் தரையிறக்கியதாக கூறப்படுகிறது.
@ap
வடகிழக்கு பிரான்சின் மார்னே பகுதியில் உள்ள அவசர சேவை அதிகாரிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
கழிவறைகளை பயன்படுத்தவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவும் தேநீரும் தேவைக்கு வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
@ap
மட்டுமின்றி, இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து அவர்களைச் சந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ருமேனியா நாட்டைச் சேர்ந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்திலேயே 303 இந்தியர்கள் மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு புறப்பட்டுள்ளனர்.
இருவர் ஏற்கனவே கைது
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் தொழில்நுட்ப காரணங்களால் கிழக்கு பிரான்சின் மார்னே பகுதியில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆட்கடத்தல் தொடர்பில் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்தே, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், 303 பயணிகள், ஒரே நாட்டவர்கள் மத்திய அமெரிக்க நாட்டுக்கு பயணப்படுவதன் காரணம் மற்றும் தேவை குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
@ap
இதில், 11 சிறார்களும் துணைக்கு எவருமின்றி பயணப்பட்டுள்ளதும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பயணிகளில் இருவர் ஏற்கனவே கைதாகியுள்ள நிலையில், அவர்கள் தற்போதும் பொலிஸ் காவலில் உள்ளனர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |