இந்திய பாஸ்போர்ட் இருந்தால் போதும் - 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு
முன் விசா இல்லாமல், பார்வையிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளின் பாஸ்போர்ட்களை ஹென்லி நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index 2025) வெளியாகியுள்ளது.
இதில், சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 193 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகலை அனுபவிக்க முடியும்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. அமெரிக்க பாஸ்போர்ட் 9வது இடத்திலிருந்து 10வது இடத்திற்கும், பிரித்தானியாவின் பாஸ்போர்ட் 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 34 இடங்கள் முன்னேறி, 8வது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய பாஸ்போர்ட்
அதே போல், 85வது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 59 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகலை அனுபவிக்க முடியும்.
இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவைப்படாத நாடுகள்
1. அங்கோலா
2. பார்படாஸ்
3. பூட்டான்
4. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
5. குக் தீவுகள்
6. டொமினிகா
7. பிஜி
8. கிரெனடா
9. ஹைட்டி
10. ஈரான்
11.ஜமைக்கா
12. கஜகஸ்தான்
13. கென்யா
14. கிரிபட்டி
15. மக்காவ்
16. மடகாஸ்கர்
17. மலேசியா
18. மொரீஷியஸ்
19. மைக்ரோனேஷியா
20. மொன்செராட்
21. நேபாளம்
22. நியுவே
23. பிலிப்பைன்ஸ்
24.ருவாண்டா
25. செனகல்
26. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
27. செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
28. தாய்லாந்து
29. டிரினிடாட் மற்றும் டொபாகோ
30. வனுவாட்டு
வருகையின் போது விசா தேவைப்படும் நாடுகள்
வருகையின் போது விசா (Visa on Arrival - VOA) என்பது உங்கள் பயணத்திற்கு முன்பு தூதரகத்தில் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, ஒரு நாட்டிற்கு வந்த பிறகு நீங்கள் பெறும் ஒரு வகை விசா ஆகும்.
நீங்கள் நாட்டிற்கு சென்றதும், விசா வருகை கவுண்டரைப் பார்வையிட்டு, விசா படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பின்னர், உங்கள் பாஸ்போர்ட், திரும்ப செல்வதற்கான டிக்கெட், ஹோட்டல் முன்பதிவுகள் போன்ற தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும்.
இது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறுபடலாம்.
31. பொலிவியா
32. புருண்டி
33. கம்போடியா
34. கேப் வெர்டே தீவுகள்
35. கொம்ரோ தீவுகள்
36. ஜிபூட்டி
37. எத்தியோப்பியா
38. கினியா-பிசாவ்
39. இந்தோனேசியா
40. ஜோர்டான்
41. லாவோஸ்
42. மாலத்தீவுகள்
43. மார்ஷல் தீவுகள்
44. மங்கோலியா
45. மொசாம்பிக்
46. மியான்மர்
47. நமீபியா
48. பலாவ் தீவுகள்
49. கத்தார்
50. சமோவா
51. சியரா லியோன்
52. சோமாலியா
53. இலங்கை
54. செயிண்ட் லூசியா
55. தான்சானியா
56. திமோர்-லெஸ்டே
57. துவாலு
58. ஜிம்பாப்வே
மின்னணு பயண ஆணையம் (ETA)
59. சீஷெல்ஸ்
இப்படியான வலுவான பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம், விசா கட்டணம் இருக்காது, விசா பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், எதிர்பாரா நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் பயனளிக்கும்.
ஆனால், ஒவ்வொரு நாட்டிற்கும் விசா இல்லாத நுழைவுக்கு சில விதிகள் உள்ளன. சில நாடுகள் உங்களை சில வாரங்கள் தங்க அனுமதிக்கும். சில நாடுகள் கடுமையான விதிகளைக் கொண்டிருக்கலாம்.
எனவே பயணம் செய்வதற்கு முன் அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |