டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: இந்திய பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சியில் 31 வயது கலிபோர்னியா ஆசிரியர் கோல் ஆலன் என்ற நபர் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினார்.
🚨 BREAKING UPDATE: President Trump has been SAFELY EVACUATED from the White House Correspondents Dinner, per sources
— Nick Sortor (@nicksortor) April 26, 2026
You can hear shots ring out in this video
A shooter opened fire in the LOBBY -- the shooter is DEAD
This is absolutely INSANE
LEFTIST VIOLENCE MUST END! pic.twitter.com/GB1eUXN8kx
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினா டிரம்ப் மற்றும் பல்வேறு அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி வேன்ஸ் ஆகியோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய கோல் ஆலன் என்ற நபரையும் அதிகாரிகள் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.
இந்திய பிரதமர் கண்டனம்
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Relieved to learn that President Trump, the First Lady and Vice President are safe and unharmed following the recent security incident at a Washington DC hotel. I extend my best wishes for their continued safety and well-being. Violence has no place in a democracy and must be…
— Narendra Modi (@narendramodi) April 26, 2026
இது தொடர்பாக X தளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்க என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், வன்முறைகள் நிபந்தனையின்றி கண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |