உலகின் மிக வயதான ஆமையை சந்தித்தார் பிரதமர் மோடி: செஷல்ஸ் நாட்டுக்கு 3 நாள் சுற்றுப்பயணம்
செஷல்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள உலகின் மிக வயதான ஆமையை சந்தித்தார்.
இந்திய பிரதமரின் சுற்றுப்பயணம்
செஷல்ஸ் நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மோடியின் இந்த பயணம் இருநாடுகளின் தூதரக உறவின் 50வது ஆண்டை குறிக்கும் வகையிலும், செஷல்ஸ் நாட்டின் பொன்விழா தேசிய தின விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப் பயணத்தின் முக்கிய அம்சமாக உலகின் பழமையான மற்றும் வயதான நில வாழ் உயிரினமான ஜோனதன் என்ற ராட்சத ஆமை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.

வெனிசுலாவிற்கு சென்றுள்ள 1600 வெளிநாட்டு மீட்பு படையினர்., உயிருடன் சிக்கிக்கொண்டு இருப்பவர்களைத் தேடும் பணி
அல்டாப்ரா ராட்சத ஆமை
ஜோனதன் என்பது அல்டாப்ரா ராட்சத ஆமை வகையாகும். 1832 ஆண்டு பிறந்த இந்த ஆமையின் தற்போதைய வயது சுமார் 194 ஆண்டுகள் ஆகும்.
மேலும் ஜோனதன் ஆமை தான் உலகில் உயிரோடு இருக்கும் விலங்கினங்களிலேயே மிகவும் வயதான உயிரினம் என்ற கின்னஸ் உலக சாதனையை இது பெற்றுள்ளது.
ஜோனதன் ஆமைக்கு தற்போது கண் பார்வை மற்றும் மோப்ப சக்தி குறைபாடு ஏற்பட்டாலும், இன்னும் ஜோனதன் ஆமை சுறுசுறுப்பாக உணவு உண்டும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி செஷல்ஸ் தேசிய தாவரவியல் பூங்காவில் இரு நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று ஒன்றையும் நட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |