ஒரு புறம் இரயில்... ஒரு பக்கம் காலணி! 60 வயது நபரை மரணத்தில் இருந்து காப்பாற்றிய பொலிசாரின் சிசிடிவி காட்சி
இந்தியாவில் நொடிப் பொழுதியில் மரணத்தில் இருந்து தப்பிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மும்பையின் Dahisar இரயில் நிலையத்தில் கடந்த 1-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு மேல் Gopal Solanki என்ற 60 வயது மதிக்கத்தக்க நபர், அங்கிருக்கும் இரயில் பாதையை கடக்க முயற்சிக்கிறார்.
அப்போது எதிர்பார்தவிதமாக அவருடைய காலனி கீழே விழுந்துவிட, உடனே அந்த காலனியை எடுத்து விட்டு அருகில் இரயில் வருவதைக் கண்டு பின்னே சென்றுவிடுகிறார்.
அதன் பின் திடீரென்று அவர் இரயில் பாதையை கடக்க முயற்சிக்க, இரயில் அருகில் வந்து கொண்டு இருந்ததால், இதை கவனித்த அங்கிருந்த பொலிஸ் அதிகாரி S.B. Nikam உடனடியாக ஓடி வந்து, அவரை இரயிலில் சிக்காமல் பிடித்து இழுக்கிறார்.
அதன் பின் பிளாட்பார்மில் இருந்த பயணிகள் உடனடியாக ஓடி வந்தனர்.
இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் நொடிப் பொழுதியில் Gopal Solanki உயிர் தப்பியுள்ளார். பொலிசார் மட்டும் உடனடியாக அவர் கையை பிடித்து இழுக்காமல் இருந்திருந்தால், மிகப் பெரும் விபரீதம் நடந்திருக்கும்.
இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பொலிசாரை பாராட்டி வருகின்றனர்.