ரஷ்ய எண்ணெய் கப்பலை திருப்பி அனுப்பிய இந்தியா! பின்னணி காரணம் என்ன?
ஆவணங்கள் குறைபாடு காரணமாக ரஷ்ய எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல்
ஹோண்டுராஸ்(Honduras) கொடி ஏற்றப்பட்ட "அந்தமான் ஸ்கைஸ்"(Andaman Skies) என்ற பழமையான ரஷ்ய எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சுமார் 7,67,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை ஏற்றி வந்த நிலையில், இந்திய துறைமுகமான வாடினாரில்(Vadinar) நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
Russia’s oil tanker rejected at Indian port🚫
— NEXTA (@nexta_tv) March 28, 2025
An aging tanker loaded with 767K barrels of Russian oil was denied entry into India due to missing documents, Bloomberg reports.
🇮🇳 The ship Andaman Skies, flagged in Honduras and built in 2004, was blocked from docking in Vadinar.… pic.twitter.com/60fJl6X5Cx
2004 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கப்பல், இந்திய அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "கடல் தகுதி சான்றிதழ்" (Seaworthiness Certificate) வழங்கத் தவறியதால் திருப்பி அனுப்பப்பட்டது என்று ப்ளூம்பெர்க் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முக்கிய காரணங்கள்
குறிப்பாக பழைய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய துறைமுக நுழைவு விதிமுறைகள் கடுமையாகி வருகின்றன.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல், அமெரிக்கா 100-க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு தடைகளை விதித்த நிலையில், ரஷ்ய எண்ணெயின் முன்னணி இறக்குமதியாளரான இந்தியா, உள்வரும் கப்பல் போக்குவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆண்டுகளுக்கும் மேலான கப்பல்களுக்கு குறிப்பிட்ட சான்றிதழ்கள் இப்போது புதிய விதிகளின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |