இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி! உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை
இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து 75 வயதான இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இராணுவ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ராம் நாத் கோவிந்த் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அவரது உடல்நிலை சீரராக இருப்பதாகவும், தொடர்ந்து ஜனாதிபதியின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக இராணுவ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
PM Narendra Modi spoke to the President's son. He inquired about the President's health and prayed for his well-being: Prime Minister's Office (PMO) pic.twitter.com/bOSzHk3TOi
— ANI (@ANI) March 26, 2021
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ராம் நாத் கோவிந்த், 2017 ஜூலை 25ம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் என்பது நினைவுக்கூரத்தக்கது.