4500 கோடி ரூபாய் அரண்மனையில் ராணியாக வாழும் இளவரசி! யார் இந்த அனன்யா ராஜே சிந்தியா?
மன்னராட்சி ஒழிந்தாலும், இந்தியாவில் இன்னும் சில மன்னர் குடும்பங்கள் பெயரளவிலாவது வாழ்ந்து வருகின்றன.
ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும், தங்களது பாரம்பரியத்தையும், பழக்க வழக்கங்களையும் அவர்கள் விடாமல் பின்பற்றி வருகின்றனர்.
அதேபோல, மன்னர் பரம்பரையின் சொத்துக்களும் அப்படியே இருக்கின்றன.
அப்படிப்பட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், இன்றும் 4500 கோடி ரூபாய் மதிப்புள்ள அரண்மனையில் ராணியாக வாழ்ந்து வருகிறார்.
சிந்தியா குடும்பம்
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நீண்ட வரலாறு கொண்ட சிந்தியா குடும்பம் இன்றும் அரச குடும்பமாக வாழ்ந்து வருகிறது.
இந்தக் குடும்பம் தற்போதைய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தக் குடும்பத்தில் இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராக உள்ளார்.
இந்த, சிந்தியா குடும்பத்தின் இளவரசியான அனன்யா ராஜே சிந்தியா(Ananya Raje Scindia) தான் குவாலியரின் ரூ.4,500 கோடி மதிப்புள்ள அரண்மனையில் இன்றும் ராணியாக தான் வாழ்ந்து வருகிறார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிரியதர்ஷினி ராஜே ஆகியோரின் மகள் தான் அனன்யா.
தந்தை அரசியலில் இருப்பதால், அனன்யா ராஜே தான் குவாலியர் அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி வருகிறார்.
அனன்யா ராஜே சிந்தியா
தனது தாயை விட அழகானவராக வர்ணிக்கப்படும் அனன்யா, உலகின் 50 அழகான பெண்களில் ஒருவராகவும் பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புகழ்பெற்ற வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பணிவு மற்றும் எளிமையே இவரது அடையாளமாக பார்க்கப்படுகிறது.
குதிரை சவாரி மற்றும் கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து, தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார்.
கல்வி
டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அனன்யா, ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.
நுண்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், பிரபல செயலியான ஸ்னாப்சாட்டில் பயிற்சி பெற்று, ஆப்பிள் நிறுவனத்தில் பயிற்சி வடிவமைப்பாளராக பணியாற்றியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற 'லெ பால்' நிகழ்வில் கலந்து கொண்டபோது, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஜெய் விலாஸ் அரண்மனை
அனன்யா வசிக்கும் அரச இல்லத்தின் பெயர் ஜெய் விலாஸ் அரண்மனை. இந்த அரண்மனை 4,500 முதல் 5,000 கோடி ரூபாய் மதிப்புடையது.
1874 ஆம் ஆண்டு மகாராஜா ஜெயஜிராவ் சிந்தியாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனையை பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் சர் மைக்கேல் ஃபிலோஸ் வடிவமைத்தார்.
12,40,771 சதுர அடி பரப்பளவில் 400 அறைகளைக் கொண்ட இந்த அரண்மனையின் சிறப்பு அதன் பிரமாண்டமான தர்பார் ஹால் ஆகும்.
3,500 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய சரவிளக்கு இங்குதான் உள்ளது.
பத்து யானைகளை அதன் மீது பத்து நாட்கள் நடக்க வைத்து அதன் வலிமையை சோதித்த பிறகே இங்கு பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
560 கிலோ தங்கத்தால் ஆன சுவரைக் கொண்ட அறை, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், ஆடம்பர தனி அறைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் என பல சிறப்புகளை இந்த அரண்மனை கொண்டுள்ளது.
ஜெய் விலாஸ் அரண்மனையின் பிரம்மாண்டத்தை செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது நேரிலும் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |