உக்ரைன்-ரஷ்யா நிலப்பரப்பு பரிமாற்றம்: ஜெலென்ஸ்கியின் புதிய திட்டம்
உக்ரைன்-ரஷ்யா மோதலுக்கு மத்தியில் நிலப்பரப்பு பரிமாற்ற யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார்.
ரஷ்ய பகுதியை கைப்பற்றிய உக்ரைன்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்காக நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில், குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 2024 இல் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் சில பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியது.
இது அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைனுக்கு சாத்தியமான செல்வாக்கை வழங்கும் ஒரு புதிய நிலையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிலப் பரிமாற்ற யோசனை
இந்நிலையில், ரஷ்யாவுடன் நிலப்பரப்பு பரிமாற்றம் செய்து கொள்வதற்கான சாத்தியக்கூறை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யாவிடம் வழங்கிவிட்டு, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரேனிய பிரதேசங்களை திரும்பப் பெறுவதற்கு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
Zelenskyy says Ukraine is open to a territorial exchange with Russia
— NEXTA (@nexta_tv) February 11, 2025
The Ukrainian president stated that he is considering trading captured areas of Russia’s Kursk region in exchange for occupied Ukrainian territories. However, he noted that Kyiv has not yet decided which lands… pic.twitter.com/TeNCIJtYsr
இந்த முன்மொழிவு தற்காலிகமானது என்பதை ஒப்புக்கொண்ட ஜெலென்ஸ்கி, "எனக்குத் தெரியாது, பார்ப்போம். ஆனால் எங்கள் அனைத்து பிரதேசங்களும் முக்கியம் - எந்தவொன்றுக்கும் முன்னுரிமை இல்லை," என்று கூறினார்.
இந்த முடிவு தொடர்பான நுட்பமான பரிசீலனைகளை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |