ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர்
கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி மோசடி செய்த இந்தியரை பொலிசார் தேடிவருகிறார்கள்.
கனடாவில், ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக கருதப்படுகிறது.
கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர்
கனடாவின் ரொரன்றோவில், ஆவிகளுடன் பேசுபவர், ஜோதிடர், அசாதாரண முறையில் நோய்களை குணமாக்குபவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார் கங்காதர் பாபு (29) என்னும் இந்தியர்.

இந்த கங்காதர், 2024 ஏப்ரலுக்கும் 2025 செப்டம்பருக்கும் இடையே, ஒரு குறிப்பிட்ட நபருக்கு மரண கண்டம் இருப்பதாகக் கூறி, தான் அவருக்கு ஆவிகள் மூலம் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறியுள்ளார்.
அதற்கு பதிலாக அவரிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்ட கங்காதர், தனக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால், அவரது குடும்பத்துக்கு தீங்கு அல்லது மரணம் ஏற்படக்கூடும் என பயம் காட்டி பணம் பெற்றுவந்துள்ளார்.
அவ்வகையில், அவர் சுமார் 800,000 கனேடிய டொலர்களை பெற்றதாக கூறப்படுகிறது.
800,000 கனேடிய டொலர்கள் என்பது இந்திய மதிப்பில் 7,63,12,400.00 ரூபாய், இலங்கை மதிப்பில் 26,83,40,000.00 ரூபாய்!
இதற்கிடையில், பொலிசார் இந்த மோசடி தொடர்பில் விசாரணை துவக்கியதும், கங்காதர் தலைமறைவாகிவிட்டார்.
அவர் இந்தியாவுக்குத் தப்பியிருக்கலாம் என கனேடிய பொலிசார் கருதுகிறார்கள்.
கங்காதரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாராவது இதேபோல அவரால் ஏமாற்றப்பட்டிருந்தால் தங்களை அணுகுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |