துபாய் Big Ticket லொட்டரியில் ரூ.1.3 கோடி வென்ற இந்திய சாரதி
Punjab Driver Wins Rs 1.3 Cr Dubai Lottery: துபாயில் பஞ்சாப் டிரக் சாரதி லொட்டரியில் ரூ.1.3 கோடி வெற்றி பெற்றுள்ளார்.
லொட்டரியில் ரூ.1.3 கோடி வென்ற இந்திய சாரதி
துபாயில் கடந்த 18 ஆண்டுகளாக வேலை செய்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த 53 வயது டிரக் சாரதி குல்வந்த் சிங், ரூ.1.3 கோடி மதிப்புள்ள லொட்டரியை வென்றுள்ளார்.
ஜெபல் அலி பகுதியில் வாழ்ந்து வந்த அவர், ஓன்லைன் வீடியோக்கள் மூலம் லொட்டரி பற்றி அறிந்து, தனது அதிர்ஷ்டத்தை சோதனை செய்ய டிக்கெட் வாங்கியதில் வெற்றி பெற்றுள்ளார்.

Abu Dhabi Big Ticket's Series 291
இந்த லொட்டரி ‘அபுதாபி பிக் டிக்கெட்’ சீரிஸ் 291-இல் நடைபெற்றது. இதில் குல்வந்த் சிங் தனியாக அல்லாமல், மற்ற இந்திய நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இறுதியில் அவர்களின் முயற்சி வெற்றி பெற்றது.
இந்த லொட்டரியின் மொத்த பரிசு தொகை 1.95 மில்லியன் திர்ஹாம் ஆகும். அதில், குல்வந்த் சிங் வென்ற தொகை 5 லட்சம் திர்ஹாம் (சுமார் ரூ.1.3 கோடி) ஆகும்.
அதே சமயம், கேரளாவைச் சேர்ந்த 30 வயது இளம் பொறியாளர் முஹம்மது இஜாஸ் சி, தனது மகனின் பிறந்த திகதியை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுத்த எண்ணில் வெற்றி பெற்று, 1 லட்சம் திர்ஹாம் (சுமார் ரூ.26 லட்சம்) பெற்றுள்ளார்.
குல்வந்த் சிங், “என் குடும்பத்திற்கும், வீட்டிற்கும் உதவியாக இந்த பணத்தை பயன்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்திலும் நண்பர்களுடன் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்குவதைத் தொடருவோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த வெற்றி, வெளிநாடுகளில் கடின உழைப்புடன் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு ஊக்கமாகவும், குடும்பத்திற்கான நம்பிக்கையாகவும் அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |