இந்திய ரயில்களில் AB பெட்டி என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்திய ரயில்வே தினமும் சுமார் 2.5 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறது.
அதன்படி, இந்திய ரயில்வே, நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து சேவையாக உள்ளது.

பயணிகளின் வசதிக்காக ஸ்லீப்பர், ஜெனரல், 3AC, 2AC, 1AC, செகண்ட் சிட்டிங் என பல்வேறு வகையான பெட்டிகள் இயக்கப்படுகின்றன.
அந்தவகையில், ரயில் பெட்டிகளில் AB பெட்டி என்பதன் அர்த்தம் குறித்து பார்க்கலாம்.
பொதுவாக ஸ்லீப்பர் பெட்டிகள் S என்றும், 3AC பெட்டிகள் B என்றும், 2AC பெட்டிகள் A என்றும் குறிப்பிடப்படுகின்றன.
AB என்பது ஒரே பெட்டியில் 2AC மற்றும் 3AC ஆகிய இரு வகுப்புகளுக்கான இருக்கைகள் இருக்கும்.
AB பெட்டியில் சில இருக்கைகள் 2AC வகுப்பிலும், சில இருக்கைகள் 3AC வகுப்பிலும் அமைந்திருக்கும்.
இந்தப் பெட்டிகளில் ஒரே இருக்கை எண் 2AC மற்றும் 3AC ஆகிய இரு பிரிவுகளிலும் இருக்கலாம். உதாரணமாக, இருக்கை எண் 3, 2AC பகுதியிலும் 3AC பகுதியிலும் இருக்க வாய்ப்புள்ளது.

3AC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நடுப் படுக்கை இருக்கும், 2ACயில் நடுப் படுக்கை இருக்காது. அங்கு கீழ் மற்றும் மேல் படுக்கைகள் மட்டுமே இருக்கும்.
3AC பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கு முன்னால் திரைகள் இருக்காது. ஆனால் 2AC பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கு தனித்தனி திரைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
மேலும், சந்தேகம் இருப்பின் உங்கள் இருக்கை குறித்த துல்லியமான தகவல்களைப் பெற TTEயை தொடர்பு கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |