9 மாநிலங்களை கடந்து செல்லும் இந்தியாவின் நீண்ட தூர ரயில் பயணம்.., எது தெரியுமா?
பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்திய ரயில்வே தினமும் சுமார் 2.5 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறது.
அந்தவகையில், இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில் எது என்பது குறித்து பாரக்கலாம்.

அதன்படி, இந்தியாவின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில் திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ஆகும்.
இந்த ரயில் தொடர்ந்து சுமார் 4 நாட்கள் பயணம் செய்து, நாட்டின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை செல்கிறது.
அசாம் மாநிலத்தின் திப்ருகரில் இருந்து புறப்படும் இந்த ரயில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை 4,189 கி.மீ. தூரம் பயணிக்கிறது.
இந்த ரயில் அசாம், நாகாலாந்து, பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வழியாக செல்கிறது.

மொத்தம் 58 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்தப் பயணத்தை முடிக்க சுமார் 74 முதல் 75 மணி நேரம் ஆகும்.
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு, 2011ஆம் ஆண்டு இந்திய இரயில்வே விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தொடரை அறிமுகப்படுத்தியது.
விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தொடரில் திப்ருகர் - கன்னியாகுமரி ரயிலே இந்தியாவின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயிலாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |