ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்த இந்திய அரசு நிறுவனம்
இந்திய அரசு ஆதரவளிக்கும் HPCL-Mittal Energy நிறுவனம் இனி ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை என முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா நிதியளிப்பதாக
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடைகளை விதித்த நிலையில், தீவிர ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ட்ரம்ப் வரிகளை 50 சதவீதமாக உயர்த்திய பின்னர் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் விழுந்தது. ரஷ்யாவின் மலிவு விலை எண்ணெயை வாங்குவதன் மூலம், உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை கைவிடுவதாக இந்தியாவின் பிரதமர் தமக்கு வாக்களித்ததாகவும் ட்ரம்ப் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை இந்திய தரப்பி விளக்கமளிக்கவில்லை.
இந்த நிலையில் அரசு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் லட்சுமி நிவாஸ் மிட்டலின் HMEL நிறுவனமும் இணைந்து நடத்தும் எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனமானது இனி ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முன்னெடுப்பதில்லை என அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளால் ரஷ்யாவிலிருந்து இனி எந்த நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

ஆனால், லண்டன் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில், HMEL நிறுவனம் கப்பல்கள் வழியாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டதாகவும், அவை பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகளின் கீழ் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |