வரலாறு படைத்த இந்திய ரிலே அணி! உலக தடகள சாம்பியன்ஷிப் சாதனைகள் முறியடிப்பு
இந்தியாவின் ஆடவர் 4×400 ரிலே அணி உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
சனிக்கிழமையன்று இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி பந்தயத்தை 2 நிமிடம் 59.05 வினாடிகளில் முடித்தது, இது எந்த ஆசிய அணியையும் விட அதிக வேகத்தல் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ், அமோஸ் ஜேக்கப், முகமது அனஸ் யாஹியா ஆகியோர் இடம் பெற்றனர்.
முதல் முறையாக இந்திய அணி உலக சாம்பியன்ஷிப்பிற்கு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்தியாவை விட அமெரிக்க அணி மட்டுமே முன்னிலையில் இருந்தது. அமெரிக்க ரிலே அணி பந்தயத்தை 2 நிமிடம் 58.47 வினாடிகளில் முடித்தது. இந்த பந்தயத்தின் மூலம் இந்தியாவின் ரிலே அணி ஆசியாவின் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது.
Photo Credit: AP
தற்போது இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி 28 ஆகஸ்ட் அதிகாலை 1 மணிக்கு) நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு முன், ஆசிய அணிகளில் அதிவேக ரிலே அணி என்ற சாதனையை ஜப்பான் 2 நிமிடம் 59.51 வினாடிகளில் முடித்தது. முன்னதாக, இந்தியாவின் சாதனை 2020 ஒலிம்பிக்கில் இதே இந்திய அணி (முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ், அமோஸ் ஜேக்கப் மற்றும் முகமது அனஸ் யாஹியா) 3 நிமிடம் 00.25 வினாடிகளில் இருந்தது. அதன்பிறகு இந்திய அணி இறுதிச் சுற்றை இழந்தது.
REUTERS
இந்த ரிலே பந்தயத்தில் இந்தியா மெதுவாக தொடங்கியது. அந்த அணிக்கு முகமது அனஸ் யாஹியா மெதுவான தொடக்கம் கொடுத்தார். முதல் சுற்றுக்குப் பிறகு இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்தது. இதன்பின் அமோஸ் ஜேக்கப் அணியின் வேகத்தை அதிகரித்து இந்தியாவை 2வது இடத்திற்கு கொண்டு சென்றார். இதன்பின், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர், சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக இந்திய ரிலேயில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளது.
Photo: AFP/ Jewel Samad
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India, World Athletics Championships 2023, Hungary, Indian Relay Team breaks Asian Record, Indian men's 4x400m relay, Muhammed Anas Yahiya, Amoj Jacob, Muhammed Ajmal Variyathodi, Rajesh Ramesh, உலக தடகள சாம்பியன்ஷிப் 2023, இந்திய ரிலே அணி