பாகிஸ்தானில் 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியர் விடுதலை! மறுபிறவி என உருக்கம்..
பாகிஸ்தானில் சுமார் 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான நபர் பல ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள மெக்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் சிங் (53). இவர் கடந்த 1992ஆம் ஆண்டு உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து குல்தீப் சிங் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று சொந்த கிராமத்திற்கு வந்த குல்தீப் சிங்கை அவரது குடும்பத்தினர் தடபுடலாக வரவேற்றனர். இதுகுறித்து குல்தீப் சிங் கூறியதாவது, 1992இல் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டேன்.
இதைத்தொடர்ந்து மூன்று வருடங்கள் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டேன். நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததன் அடிப்படையில் தற்போது விடுதலை செய்யப்பட்டேன்.
நான் உயிருடன் சொந்த நாட்டிற்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. உண்மையில் மறுபிறவி எடுத்துள்ளது போல் உணர்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.