ஓமன் கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்: 8 இந்தியர்கள், 1 இலங்கையர் மீட்பு
ஓமன் கடற்கரையில் நடந்த சரக்கு கப்பல் விபத்தில் சிக்கி கொண்ட 8 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
8 இந்திய மாலுமிகள் மீட்பு
ஓமன் கடற்கரையை ஒட்டி 25 கடல் மைல் தொலைவில் திங்கள் கிழமை, கொமரோஸ் கொடியில் இயங்கும் "ப்ரெஸ்டீஜ் பால்கன்”(Prestige Falcon) என்ற எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கை கப்பல் ஊழியர்கள் உட்பட 16 பேர் கொண்ட குழுவினர் கப்பலுடன் கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போய் இருந்தனர்.
Updates regarding the recent capsizing incident of the Comoros flagged oil tanker southeast of Ras Madrakah pic.twitter.com/PxVLxlTQGD
— مركز الأمن البحري| MARITIME SECURITY CENTRE (@OMAN_MSC) July 16, 2024
இந்நிலையில், இந்திய கடற்படை மற்றும் ஓமான் அதிகாரிகளின் வீர திறமையான மீட்பு நடவடிக்கையில் எட்டு இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு. கிரண் வர்தன் சிங் அவர்கள் நேற்று (வியாழக்கிழமை) இதனை உறுதிப்படுத்தினார்.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஒரு இந்திய மாலுமி உயிரிழந்ததற்கும் அவர் இரங்கல் தெரிவித்தார்.
தொடரும் தேடுதல் பணி
தொடர் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 8 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கை குடிமகன் என ஒன்பது பேர் மீட்கப்பட்டனர்.
நீண்ட தூர கடல் ரோந்து விமானமான P8I இந்த தேடுதல் பணியில் உதவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |