உக்ரைனில் ரட்சகனாக மாறிய இந்திய உணவகம்! வைரலாகும் புகைப்படம்
உக்ரைன் தலைநகர கீவில் உள்ள இந்திய உணவகம், போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் உக்ரேனியர்களுக்கு ரட்சகனாக மாறியுள்ளது.
ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் ஈக்கட்டான சூழ்நிலையில், கிட்டதட்ட 70 பேருக்கு தங்க இடமளித்து, உணவளித்து வருகிறது கீவில் உள்ள Saathiya என்ற இந்திய உணவகம்.
உணவகத்தின் உரிமையாளரான மனிஷ் தேவ் கூறியதாவது, Chokolivs’kyi Boulevard-ன் அடித்தளத்தில் உணவகம் அமைந்துள்ளதால், அது ஒரு வகையான பதுங்கு குழியாக மாறியுள்ளது.
தங்களை சுற்றி குண்டுகள் வெக்கும் போது, மக்கள் தங்கள் உடமைகளுடன் உணவகத்திற்கு ஓடி வந்தனர்.
உணவகத்தில் தங்கியிருக்கும் அனைவருக்கும் இலவசமாக உணவளிக்கப்பட்டு வருகிறது.
உக்ரேனியர் பலரும் உணவகத்தில் தஞ்சமடைந்துள்ளனர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நாம் நம்புகிறேன்.
இந்நிலைியல், Good என்ற பிரபல ட்விட்டர் கணக்கு, அதன் பக்கத்தில் இந்திய உணவகத்தின் செயல் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளது. அதே போல் பலரும் உணவகத்தின் உரிமையாளர் மனீஷ் தேவின் நல்லுள்ளத்தை பாராட்டி வருகின்றனர்.
A man called Manish Dave has turned his restaurant into a shelter for over 125 vulnerable people in Ukraine. He & his staff cook food & risk their lives in search of ration for them all. The world needs more people like Manish Dave. pic.twitter.com/ZnQlViwDoZ
— GOOD (@good) February 27, 2022